search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயின் பறிப்பு"

    • மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
    • விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் மணியரசி (வயது 27), இவர் புலியூர்காட்டு சாகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணிபுரந்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புலியூர் காட்டு சாகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சிறு தொண்டைமாதேவி அருகே வந்து கொண்டிருந்தபோது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.

    இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின்படி பெண் டாக்டரிடமிருந்து செயினை பறித்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். இவர் நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்த விக்கி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர். தாலி செயின் பறிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தி லேயே கொள்ளையனை கண்டறிந்த பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    • ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.

    சென்னை:

    மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் கொள்ளையர்கள் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 14-ந் தேதி மாதவரத்தில் கவிதா என்ற பெண்ணிடம் 3 பேர் கொண்ட கும்பல் 8 பவுன் செயினை பறித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது மகேஸ்குமார் என்கிற கொள்ளையன் பிடிபட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதவரம் பகுதியில் பெண்களை குறிவைத்து ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.

    ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு நேற்று இரவு துப்பாக்கி முனையில் தினேஷ் புஜார், ரமேஷ் பஞ்சாரா ஆகிய 2 கொள்ளையர்களையும் மடக்கி பிடித்தனர். இருவரையும் போலீசார் விமானத்தில் அழைத்து வருகிறார்கள். ராஜஸ்தான் கொள்ளையர்கள் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து இங்கு மோட்டார் சைக்கிள்களை முதலில் திருடியிருக்கிறார்கள்.

    பின்னர் திருட்டு மோட்டார் சைக்கிளில் மாதவரம் பகுதியை குறிவைத்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இவர்கள் பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.

    விமானத்தில் வந்து செயினை பறித்து விட்டு ராஜஸ்தான் கொள்ளையர்கள் ரெயிலில் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று விடுவார்கள். விமானத்தில் சென்றால் திருட்டு நகைகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் ரெயில் பயணத்தை தேர்வு செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரூபசேனா காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
    • 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (வயது 38). இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரூபசேனாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக ரூபசேனா அளித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. கடந்த 22.1.23 அன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஓட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர்.

    இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப்பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்த போலீசார் மதுரையைச் சேர்ந்த கபாலி என்பவனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை பிடித்து வந்தனர். போலீசாரது விசாரணையில் அவன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அருண்குமார்(26) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செயின் பறிப்பு வழக்கில் சீனிவாசனுக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • கடந்த மே மாதம் அவரை புழல் சிறைக்குஇடமாற்றம் செய்வதற்காக அழைத்து வந்த போது வலிப்பு ஏற்பட்டது.

    போரூர்:

    ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற பர்மா சீனு (48).இவன் மீது 50க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. 2017-ம் ஆண்டு சேலத்தில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சீனிவாசனுக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    கடந்த மே மாதம் அவரை புழல் சிறைக்குஇடமாற்றம் செய்வதற்காக அழைத்து வந்த போது வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்தபோது சீனிவாசன் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடிவந்தனர். இதற்கிடையே ஆழ்வார்திருநகர் பகுதியில் பெண் ஒருவரிடம் செயின் பறித்து தப்பிய சீனிவாசனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை காட்டினர்.
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். சுண்டப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்.

    இவரது மனைவி உமாதேவி (27). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் 2 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கெம்பனூரில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் குழந்தைகளுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் உமாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இந்த 2 செயின் பறிப்பு சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி மேகலா (50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது மேகலாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்துஇருந்த 3 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (24). சம்பவத்தன்று இவர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலையை முடித்து விட்டு கே.என்.ஜி. புதூர் அருகே இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கீர்த்தனா கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    செயினை பறிகொடுத்த பெண்கள் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    • இளையான்குடி அருகே வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதை பார்த்த நாகவள்ளி அவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது அவர்கள் அந்த பகுதியில் திருட வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகவள்ளி இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். உடனே மர்மநபர்கள் நாகவள்ளியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு ேபான்றவை அடிக்கடி நடந்து வருகிறது. பூட்டி இருக்கும் வீட்டை ேநாட்டமிடும் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்
    • பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காலகுறிச்சியை சேர்ந்தவர் மனோகரன். டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் விடுதியில் தங்கி படிக்கும் மகனை பார்ப்பதற்காக மாெபட்டில் புறப்பட்டனர். மொபட்டை மனோகரன் ஓட்டிச் சென்றார்.

    மொபட் சமத்தூர் மணல்மேடு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    • சுப்பிரமணி. இவரது மனைவி கோமதி (வயது 41). இவர் நேற்று இரவு இவர் இருசக்கர வாகனத்தில் எடப்பாடி வந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பினார்.
    • மர்மநபர், திடீரென கோமதியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றி யத்துக்கு உட்ட பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கோமதி (வயது 41). இவர் நேற்று இரவு இவர் இருசக்கர வாகனத்தில் எடப்பாடி வந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பினார்.

    கொங்கணாபுரம் அடுத்த ரெட்டிபட்டி கிருஷ்ணன் கோவில் அருகே, எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென கோமதியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    மர்ம நபர் தாக்கியதில் நிலைகுலைந்து கீழே சரிந்த கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் கோமதியை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி, மர்ம நபர் செயின் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி யினரிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • காயமடைந்த வியாபாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
    • குற்றவாளிகளை கைது செய்து தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கண்ணூர் கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது29) ஆவார். இவர் தண்டலச்சேரி பகுதியில் பால் டெப்போ ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இவர் ஆரணி பஜார் வீதியில் உள்ள அம்மன் கோவில் அருகே கொரியர் சர்வீஸ் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உதயகுமாரை வழிமறித்தனர்.

    பின்னர்,அவரது கழுத்தில் இருந்த 12 கிராம் தங்கச் செயினை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த உதயகுமாரை கத்தி முனையில் மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர்,அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர்,இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பால் வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி தங்கச்செயினை பறித்துச் சென்ற ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர்களான தமிழ் (எ) தமிழரசன்(வயது25), கார்த்திக்(வயது23) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்படி தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் தமிழ் (எ) தமிழரசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர்,போலீசார் குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பால் வியாபாரியிடம் வாலிபர்கள் இரண்டு பேர் கத்தி முனையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆட்டோவில் சென்ற ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா பாத்திமா (வயது24). இவர் மதுரை இலந்தைகுளத்தில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவில் சீருடை அணியாமல் மேலும் 2 பேர் பயணம் செய்தனர்.

    சிறிதுதூரம் சென்றதும் அவர்கள், ரபீனாபாத்திமா விடம் இருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரபீனாபாத்திமா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (43) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த 5¾பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.

    இதுகுறித்து கவிதா கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். மேலூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்திருந் தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
    • புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் : 

    தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசுதா (வயது 38). இவா் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ஜெயசுதா வீட்டின் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் ஜெயசுதா அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×